344. அப்டி போடு அருவாள !
டி.ஆர்.பாலு தான் நம்பர் ஒன் அமைச்சர் * சொல்கிறார் ராமதாஸ்
அமைச்சர்களில் டி.ஆர்.பாலு தான் நம்பர் ஒன் அமைச்சராக செயல்படுகிறார் என்று பா.ம.க. தலைவர் ராம்தாஸ் கூறினார். சென்னையில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
சிமென்ட் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. பருப்பு, எண்ணெயை பாக்கெட் செய்து ரேஷன் கடைகளில் வினியோகிப்பது போல் சிமென்டையும் இறக்குமதி செய்து ரேஷன் கடை அல்லது டாஸ்மாக்கில் விற்பனை செய்ய வேண்டும்(!). விரைவில் சிமென்ட் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.
பீடி பண்டல்களில் மண்டை ஓடு வருகிறது. இதை அகற்ற மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியது பீடி முதலாளிகளின் குரலாகவே எதிரொலிக்கிறது. ஆனால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி இதுவரை கடிதம் எழுதாதது ஏன்?
(Side comment: மாறன் குடும்பத்து நாளிதழான தினகரனில் வெளியாகியுள்ள அந்த சர்வே, டாக்டர் ராமதாஸை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழகக் கட்சிகளிலிருந்து தில்லி சென்றிருக்கும் அமைச்சர்களில், தயாநிதி மாறனே அதிக நிர்வாகத் திறமை மிக்கவராக அந்த சர்வே கூறுகிறது. அவர் 64% ஓட்டுகளை அந்த சர்வேயில் பெற்றுள்ளார். அவரை அடுத்து, அதிக ஓட்டுகள் பெற்றவர்கள் ப.சிதம்பரம் மற்றும் டி.ஆர்.பாலு.
டாக்டர் அன்புமணி 1% ஒட்டுகளே பெற்றிருப்பதாக அந்த சர்வே கூறியிருப்பதே, மருத்துவரின் கோபத்துக்குக் காரணம். இதன் மூலம், முதலமைச்சர் மலிவான அரசியல் செய்வதாகவும் டாக்டர் குற்றம் சாட்டியுள்ளார்.)
அன்புமணியை உலக அளவில் புகழ்கின்றனர். தயாநிதி மாறனுக்கு நூற்றுக்கு நூறு மார்க் கூட போட்டுக் கொள்ளுங்கள். அதற்காக அன்புமணியை இழிவுப் படுத்தாதீர்கள். தமிழக அரசியலில் இதுவரை இந்த நிலை வந்ததில்லை. இதன் மூலம் புதிய நாகரிகத்தை தமிழகத்தில் புகுத்துகின்றனர். தமிழக மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தி.மு.க. கூட்டணி கட்சியில் தொடர்ந்து நீடிப்போம். ஐந்து ஆண்டுகளும் ஆதரவு தருவோம். ஆனால், ஜால்ரா மட்டும் போட மாட்டோம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
(Final comment: ஒரே குழப்பமா இல்லை ;-))
நன்றி: தினமலர்
*** 344 ***
5 மறுமொழிகள்:
Test comment :)
AnbumaNi has been kept in the place he deserves. To that extent opinion poll is OK.
//அன்புமணி 1% ஒட்டுகளே பெற்றிருப்பதாக..//
Has the figure been checked properly? I feel it must have been 0.1 % and a decimal misplacement is involved here, as even 1% is too generous.
GK
பின்ன..?
எம்புட்டுக் கஷ்டப்பட்டு பையனுக்கு சின்னப் புள்ளைல இருந்து அரசியல் சொல்லிக் கொடுத்து, மக்களுக்காகப் போராடக் கத்துக் கொடுத்து, பிள்ளையும் மாசக்கணக்கா ஜெயிலுக்குப் போயி.. செக்கு இழுத்து, களி தின்னு, வெயில், மழைன்னுகூட பார்க்காம பொதுமக்களுக்காக உழைச்சு, உழைச்சு, தேர்தலுக்காக நூறு நாள், தமிழ்நாடு இமுழுக்க இந்த வேகாத வெயில்ல அலைஞ்சு, திரிஞ்சு பொதுமக்களோட அமோக ஆதரவுல ஜெயிச்சு, அதுக்கப்புறம் 'உங்க பையன் அமைச்சராகலைன்னா நானே பிரதமர் பொறுப்பை ஏத்துக்க மாட்டேன்'னு பாசமா பிரதமர் மன்மோகன்சிங்கே கூப்பிட்டு, அமைச்சராக்கிருக்காரு.. இப்படி ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணுன்னு மார்க் போட்டா பெத்த அப்பனுக்கு கோபம் வராதா..? வயிறு எறியாதா?
உண்மை தமிழன்,
வருகைக்கு நன்றி.
//
பிள்ளையும் மாசக்கணக்கா ஜெயிலுக்குப் போயி.. செக்கு இழுத்து, களி தின்னு, வெயில், மழைன்னுகூட பார்க்காம பொதுமக்களுக்காக உழைச்சு,
உழைச்சு, தேர்தலுக்காக நூறு நாள், தமிழ்நாடு இமுழுக்க இந்த வேகாத வெயில்ல அலைஞ்சு, திரிஞ்சு பொதுமக்களோட அமோக ஆதரவுல
ஜெயிச்சு, அதுக்கப்புறம் 'உங்க பையன் அமைச்சராகலைன்னா நானே பிரதமர் பொறுப்பை ஏத்துக்க மாட்டேன்'னு பாசமா பிரதமர்
மன்மோகன்சிங்கே கூப்பிட்டு,
//
அய்யா, தாங்கள் வ.பு.வில் மகா வல்லவர் போலும் (வ.பு = வஞ்சப்புகழ்ச்சி) ! சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு :))
கோபாலகிருஷ்ணுடு,
கருத்துக்கு நன்றி. 1 சதவிகிதமே அதிகம்-னு சொல்றீங்க ??? ;-)
//Final comment: ஒரே குழப்பமா இல்லை//
குழப்பமே இல்லையே! நடக்குற கூத்து கொஞ்சமாவது புரிஞ்சாத்தானே குழம்பறதுக்கு. அதான் ஒன்னுமே புரிய மாட்டேங்க்குதே!! தேர்தல்லே நிக்காமலேயே ஒருத்தர் அமைச்சர் ஆகுறார். ஒருத்தர் இந்தியாவில் ஒரு தொழில் விடாம ஏகாதிபத்யம் பண்றார். நிதியமைச்சர் என்னன்னா நாய் பிஸ்கட் விலைய குறைச்சுட்டு நகைச்சுவைங்கறார். இதுல ஏதாவது ஒன்னு ஏன் நடக்குது, எப்படி நடக்குதுன்னு புரியுதா? கொஞ்சம் புரிஞ்சாத்தான் இந்த குழப்பமெல்லாம்!!!;-)
Post a Comment